செய்திகள்
எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்த காட்சி (கோப்பு படம்)

வி‌ஷ வாயு கசிவால் 14 பேர் பலி: எல்.ஜி. பாலிமர்ஸ் சிஇஓ, எம்.டி. உள்பட 12 பேர் கைது

Published On 2020-07-07 17:05 GMT   |   Update On 2020-07-07 17:05 GMT
விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவால் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் கடந்த மே மாதம் 7-ந்தேதி அதிகாலை வி‌ஷ வாயு கசிவு ஏற்பட்டது.

தொழிற்சாலையை சுற்றியுள்ள 5 கி.மீ. கிராமங்களுக்கு வி‌ஷ வாயு பரவியது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் வி‌ஷ வாயுயை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர்.

சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வி‌ஷ வாயு கசிவால் குழந்தை உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வி‌ஷ வாயு கசிவு காரணமாக கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாற்று வாயுவை செலுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பான வழக்கில் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ, எம்.டி, டெக்னிக்கல் டைரக்டர், இரண்டு டைரக்டர்கள், மற்ற ஸ்டாஃப்கள் உள்பட 12 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். எம்.டி, டெக்னிக்கல் டைரக்டர் ஆகியோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
Tags:    

Similar News