செய்திகள்
பிபிஇ கிட்ஸ்

பிபிஇ கிட்ஸ் அணிந்து நகைக்கடையில் 780 கிராம் தங்கத்தை கொள்ளையடித்த கும்பல்

Published On 2020-07-07 14:23 GMT   |   Update On 2020-07-07 14:23 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு கடையில் 780 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி கொள்ளைக்கார கும்பல்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றன. மகாராஷ்டிர மாநிலம் சட்டாரா மாவட்டத்தில உள்ள பால்டான் என்ற பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த நகைக்கடையில் கொள்ளை அடிக்க ஒரு கும்பல் முடிவு செய்தது.

பொதுவாக அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் முகத்தை மறைத்து சம்பவத்தில் ஈடுபடுவார்கள். தற்போது கொரோன வைரஸ் தொற்றில் இருந்து தங்களை காப்பாற்றுவதற்காக முன்கள பணியார்கள் பிபிஇ கிட்ஸ்-களை பயன்படுத்துகின்றனர். இதை அணிந்து கொண்டால் உடலின் ஒரு பாகம் கூட தெரியாது.

கொள்ளையர்கள் இந்த உடையை அணிந்து கொள்ளை அடித்துள்ளனர். சுவரை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் சுமார் 780 கிராம் எடையுள்ள தங்களை நகைகளை கொள்ளையடித்துள்ளனர். சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News