செய்திகள்
லஞ்சம்

குஜராத்தில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

Published On 2020-07-06 15:12 GMT   |   Update On 2020-07-06 15:12 GMT
குஜராத்தில் பெண்ணை மானபங்கம் செய்த வழக்கு தொடர்பாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா சடேஜாவை போலீசார் கைது செய்தனர்
ஆமதாபாத்:

குஜராத்தின் மேற்கு ஆமதாபாத் மகளிர் காவல்நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுவேதா சடேஜா. அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் கேனல் ‌ஷா என்பவர் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா சடேஜா, வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர், தரகர் மூலமாக முதல்கட்டமாக ரூ.20 லட்சத்தை சப்-இன்ஸ்பெக்டரிடம் லஞ்சமாக கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மீதி ரூ.15 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா சடேஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News