செய்திகள்
செயற்கைக்கோள் பார்வையில் கல்வான் பள்ளத்தாக்கு

கல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் வரை பின் வாங்கியதாக தகவல்

Published On 2020-07-06 06:59 GMT   |   Update On 2020-07-06 06:59 GMT
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் இரண்டு கி.மீட்டர் வரை பின்வாங்கியதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் மோதிக்கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர்.

இதனால் பதற்ற நிலை உருவானது. சீனா ராணுவ வீரர்களையும், ராணுவ வாகனத்தையும் அதிக அளவில் குவித்தது. இந்தியாவும் ராணுவ வீரர்களை அதிகப்படுத்தியதுடன், ஹெலிகாப்டர் ரோந்து பணியையும் தொடர்ந்தது.

இதற்கிடையில் ராணுவ காமாண்டர்கள், வெளியுறவுத்துறை மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் காமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ராணுவம் கூடாரங்கள், வாகனங்கள், ராணுவ வீரர்களை சீனா சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்னால் அழைத்துக் கொண்டதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கிறன்.

அதுவேளையில் ஆயுதங்களுடன் உள்ள வாகனங்களை சர்சைக்குரிய அந்த இடத்திலேயே நிறுத்தி வைத்திருப்பதாகவும், ராணுவம் தற்போதுள்ள சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News