செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடம்: கட்டுப்படுத்துவதில் தோல்வி என ராகுல் குற்றச்சாட்டு

Published On 2020-07-06 03:52 GMT   |   Update On 2020-07-06 08:00 GMT
கொரோனா பாதிப்பில் மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்திற்கு உயர்ந்தது குறித்து ராகுல் காந்தி விமர்சனம் எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. தற்போது ஆசிய கண்டத்திலும், அமெரிக்க கண்டத்திலும் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு தழுவிய பொது முடக்கம் மார்ச் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் கொரோனாவில் தாக்கம் அதிகரித்து விட்டது. ஊரடங்கை சரியான வழியில் பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசு மீது விமர்சனம் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளது. தற்போது ரஷியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதனால் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரைபடம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் எதிர்கால ஆய்வில் மோடியின் தோல்விகள்

1. கொரோனா வைரஸ் தொற்று
2. பண மதிப்பிழப்பு
3. ஜிஎஸ்டி அமல்’’ எனப்பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News