செய்திகள்
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியா பயணித்தவர்கள் (பழைய படம்)

வந்தே பாரத் திட்டம்- ஜூலை 11 முதல் 19 வரை அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்கம்

Published On 2020-07-05 12:25 GMT   |   Update On 2020-07-05 12:25 GMT
வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் 23-ம் தேதியில் இருந்து மத்திய அரசு சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தியது. மருத்துவ பொருட்களுக்கான விமான சேவைக்கு மட்டுமே அனுமதி அளித்தது.

நாட்கள் செல்ல செல்ல ஊரடங்கு முடிவுக்கு வந்த பாடில்லை. இதனால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களின் உறவினர்கள் நீதிமன்றங்களை நாடினர்.

இதனால் மத்திய அரசு மே 6-ம் தேதியில் இருந்து வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் சிக்கியவர்களை சிறந்த விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது.
 
இதற்கிடையே, 4-வது கட்டமாக ஜூலை 3-ம் தேதியில் இருந்து ஜூலை 15-ம் தேதி வரை 170 விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஜூலை 11 முதல் 19-ம் தேதி வரை 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News