செய்திகள்
பிரதமர் மோடி

உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சவால்

Published On 2020-07-05 08:53 GMT   |   Update On 2020-07-05 08:53 GMT
உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

லடாக் எல்லையில் இந்தியாசீனா ராணுவம் இடையே நடந்த மோதல் காரணமாக இரு நாடுகளின் உறவில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த சூழலில் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தடை விதித்தது.

இந்த நிலையில் உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் எனவும் இதற்காக “ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு” என்ற சவாலில் பங்கேற்கும் படியும் இந்திய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

உங்களிடம் இதுபோன்ற தயாரிப்பு இருந்தால் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கான பார்வை மற்றும் நிபுணத்துவம் உங்களிடம் இருப்பதாக உணர்ந்தால் இந்த சவால் உங்களுக்கானது. தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உள்நாட்டு பயன்பாடுகளை புதுமைப்படுத்தவும், மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் தொடக்க மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பினரிடையே பெரும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் காண்கிறோம். இன்று, ஒட்டுமொத்த தேசமும் ஒரு ஆத்மனிர்பார் பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, அவர்களின் முயற்சிகளுக்கு வழிகாட்டுதலையும், அவர்களின் கடின உழைப்புக்கு வேகத்தையும், நமது சந்தையை திருப்திப்படுத்தக்கூடிய மற்றும் போட்டியிடக்கூடிய பயன்பாடுகளை உருவாக்க அவர்களின் திறமைக்கு வழிகாட்டுதலையும் வழங்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News