செய்திகள்
யோகி ஆதித்யநாத்

துப்பாக்கிச்சூட்டில் பலியான போலீசார் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய்: உ.பி. முதல்வர் அறிவிப்பு

Published On 2020-07-03 17:50 GMT   |   Update On 2020-07-03 17:50 GMT
ரவுடிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த 8 போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே  உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி  டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.

போலீசார் வரும் தகவல் ஏற்கனவே விகாஸ் துபேயுக்கு தெரிந்துள்ளது. இதனால் போலீசாரை கூட்டாளிகளுடன் சேர்ந்து சுட்டு வீழ்த்த திட்டம் தீட்டினான். போலீசார் கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் அவர்களை ஒரு இடத்தில் தடுக்க வேண்டும் என்று ஜேசிபி-களை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்தான்.

போலீசார் அந்த இடத்தை அடைந்ததும், ஜேசிபி குறுக்கே நிறுத்தப்பட்டதால் வாகனத்தில் இருந்து இறங்கினர். அப்போது வீட்டின் மாடிகளில் தயாராக இருந்த கும்பல் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். சுதாரித்த போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.

என்றாலும் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 பேர் போலீசார் உயிரிழந்தனர். இரண்டு ரவுடிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தை உலுக்கியுள்ளது.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்த போலீசார் உடல்களுக்கு  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், உயிரிழந்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அதோடு ஒருவருக்கு அரசு வேலையும், வழக்கமாக கிடைக்கும் பென்சடை வித அதிக பென்சனும் வழங்கப்படும் என்றார்.
Tags:    

Similar News