செய்திகள்
ரெயில்வேயில் ஆட்குறைப்பு இல்லை

ஆட்கள் குறைப்பு இல்லை: ரெயில்வே வாரியம் திட்டவட்டம்

Published On 2020-07-03 17:14 GMT   |   Update On 2020-07-03 17:30 GMT
இந்திய ரெயில்வேயில் ஆட்கள் குறைப்பு இல்லை, ஆனால் சுயவிவரம் (Profile) மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரெயில்வேயில் ஆட்கள் குறைப்பு இல்லை, ஆனால் சுயவிவரம் (Profile) மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரெயில்வேதுறை அதிகமான தொழிலாளர்களை கொண்ட அரசு துறையாகும். லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் ரெயில்சேவை முடங்கியது. தற்போது சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொருளாதார ரீதியில் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ரெயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்கவும், புது இடங்களை நிரப்புவதை நிறுத்தி வைக்கவும் பொது மேலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் ஆட்கள் குறைப்பு இருக்காது என உறுதி அளித்துள்ளது. அதேவேளையில் சுயவிவரம் (Profile) மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே வாரியத்தின் டைரக்டர் ஜெனரல் ஆனந்த் எஸ் காதி ‘‘ரெயில்வேஸ் தற்போதைய நிலையில் சரிப்படுத்துகிறது. குறைப்பு நடவடிக்கை அல்ல. ரெயில்வேத்துறை அதிக தொழிலாளர்கள் கொண்டதாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் அல்லை. நாங்கள் திறமையல்லாததில் இருந்து அதிக திறமையுள்ள வேலையை நொக்கி செல்ல இருக்கிறோம்.

செயல்படாத, பாதுகாப்பு இல்லாத காலியிடங்கள் குறித்து தெரிவிக்க கேட்டுள்ளோம். இது பாதுகாப்பான கூடுதல் இடத்தை ஏற்கனவே தொடங்கியுள்ள கட்டமைப்பு திட்டத்தில் ஏற்படுத்த முடியும். பல்வேறு பதவிக்கு தேவையான இடங்களை நிரப்பும் நடைமுறை வழக்கம்போல் நடக்கும். இதில் எந்த பாதிப்பும் ஏற்படாது ’’ எனத் தெரிவித்துள்ளார்.

ரெயில்வேயில் தற்போது 12,18, 355 தொழிலாளர்கள் உள்ளனர். 65 சதவீத வருவாய் சம்பளத்திற்கும், பென்சனுக்கும் செலவிடப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 1,40,640 இடங்கள் காலியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News