செய்திகள்
க்ளோ அண்டு லவ்லி

‘க்ளோ அண்டு லவ்லி’யாக மாறிய ஃபேர் அண்டு லவ்லி

Published On 2020-07-03 13:04 GMT   |   Update On 2020-07-03 13:04 GMT
ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனத்தில் சருமப் பாதுகாப்பு தயாரிப்பான ஃபேர் அண்டு லவ்லி பிராண்டின் பெயர் ‘க்ளோ அண்டு லவ்லி’ என்று மாற்றப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனத்தின் ஃபேர் அண்டு லவ்லி விளம்பரங்களில் ‘வெள்ளையாக இருப்பதுதான் அழகு’ என்பதை குறிக்கும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு பிறகு உலகமெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிறத்தை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் செய்யும் ‘ஃபேர் அண்டு லவ்லி’ பிராண்டுக்கு எதிர்ப்பு எழுந்தது.

ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் ‘ஃபேர் அண்டு லவ்லி’ பிராண்டின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக அறிவித்தது.

இனி சருமத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ‘ஃபேர் அண்டு லவ்லி’ பெயரும் மாற்றப்படும் என்று ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் கூறி இருந்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் தற்போது ‘க்ளோ அண்டு லவ்லி’ என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

மேலும் நிறுவனம் கூறுகையில், ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் சருமப் பாதுகாப்பு தொடர்பான புரட்சிகரமான முடிவை எடுத்திருக்கிறோம். நேர்மறையான அழகை வெளிப்படுத்தும் வகையில் ‘க்ளோ அண்டு லவ்லி’ என்று ஃபேர் அண்டு லவ்லியின் பெயரை மாற்றி உள்ளோம். சில மாதங்களில் ‘க்ளோ அண்டு லவ்லி’ பிராண்ட் கடைகளில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News