செய்திகள்
கூகுள்

தடை செய்யப்பட்ட சீன செயலிகளை முடக்கி விட்டோம்: கூகுள் அறிவிப்பு

Published On 2020-07-03 04:25 GMT   |   Update On 2020-07-03 04:25 GMT
59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அந்த செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தற்காலிகமாக முடக்கி இருப்பதாக ‘கூகுள்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :

59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதையடுத்து, அந்த செயலிகளை நடத்தும் சில நிறுவனங்கள், தாங்களாக முன்வந்து ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து செயலிகளை விலக்கிக் கொண்டுள்ளன.

அதே சமயத்தில், வேறு சில செயலிகள், இன்னும் பிளே ஸ்டோரில் நீடிக்கின்றன. இருப்பினும், அந்த செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தற்காலிகமாக முடக்கி இருப்பதாக ‘கூகுள்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை எந்த செயலிகள் என்று ‘கூகுள்’ நிறுவனம் தெரிவிக்கவில்லை.
Tags:    

Similar News