செய்திகள்
ரெயில்வே

பயணிகள் ரெயில்கள் இயக்கம் : தனியார்மயமாக்கலை தொடங்கிய ரெயில்வே

Published On 2020-07-02 14:20 GMT   |   Update On 2020-07-02 14:20 GMT
குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரெயில்களை இயக்குவதை தனியார்மயமாக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இப்பணியை நேற்று முறைப்படி தொடங்கியது.
புதுடெல்லி:

குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரெயில்களை இயக்குவதை தனியார்மயமாக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இப்பணியை நேற்று முறைப்படி தொடங்கியது.

நாடு முழுவதும் 109 ஜோடி வழித்தடங்கள் தனியாருக்கு விடப்படுகிறது. அவற்றில் 151 ரெயில்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது, ரூ.30 ஆயிரம் கோடி தனியார் முதலீட்டுக்கு வழிவகுக்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க நேற்று தனியாரிடம் இருந்து விண்ணப்பங்களை கோரி ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து ரெயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:-

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் இயக்கப்படும். குறைவான பயண நேரம், பயணிகள் பாதுகாப்பு, உலகத்தர பயண அனுபவம் ஆகியவற்றை அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும்.

எல்லா ரெயில்களும் குறைந்தபட்சம் 16 பெட்டிகளுடன் இருக்க வேண்டும். பெரும்பாலும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும். இந்த ரெயில்களை இந்திய ரெயில்வேயின் டிரைவர்களும், கார்டுகளும்தான் இயக்குவார்கள்.

இவ்வாறு ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News