செய்திகள்
பல்லாங்குழி

பல்லாங்குழி விளையாட்டு பற்றி பேசிய பிரதமர் மோடி

Published On 2020-06-29 06:11 GMT   |   Update On 2020-06-29 06:11 GMT
பிரதமர் மோடி நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் போது தமிழ்நாட்டில் விளையாடப்படும் பல்லாங்குழி விளையாட்டு பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் போது தமிழ்நாட்டில் விளையாடப்படும் பல்லாங்குழி விளையாட்டு பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.

தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஓய்வாக இருக்கும் மக்களில் பலரும் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். தமிழ்நாட்டின் பல்லாங்குழி விளையாட்டு கர்நாடகத்தில் ‘அலிகுலி மனே‘ பெயரிலும், ஆந்திராவில் ‘வாமன் குண்ட்லு‘ என்ற பெயரிலும் விளையாடப்படுகிறது.



தட்டில் வரிசையாக உள்ள குழிகளில் முத்துக்களை நிரப்பி விளையாடும் பல்லாங்குழி விளையாட்டு தென்னிந்தியாவில் மட்டுமின்றி தெற்கு ஆசியாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் பிரபமாகி வருகிறது. கிராமங்களில் தாயம் விளையாட்டும் விளையாடுகின்றனர். சோழி, புளியமுத்துக்களை கொண்டு விளையாடும் இந்த விளையாட்டுகள் இன்றைக்கும் கிராமங்களில் பிரபலமாக விளங்குகிறது. இந்த விளையாட்டுகள் மட்டுமின்றி பரமபதம் எனப்படும் ஏணி-பாம்பு விளையாட்டு, சிறு கற்களை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடும் ‘களசிக்கல்‘ விளையாட்டு போன்ற விளையாட்டுகளையும் தற்போது சிறுவர், சிறுமிகள் விளையாடுகின்றனர். இதுபோன்ற விளையாட்டுகள்தான் நம் தேசத்தின் மக்களை இன்றைக்கும் உயிர்ப்போடு வைத்து இருக்கிறது. இவ்வாறு மோடி கூறினார்.
Tags:    

Similar News