செய்திகள்
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

குருகிராம்-துவாரகா நெடுஞ்சாலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... வீடியோ

Published On 2020-06-27 08:04 GMT   |   Update On 2020-06-27 08:04 GMT
குருகிராம்-துவாரகா நெடுஞ்சாலையில் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஜான்சி:

வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. 

மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் விவசாய நிலங்களில் மருந்து தெளிக்கப்பட்டு வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. எனினும், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், பயிர்களை தின்று தீர்ப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


இந்நிலையில், அரியானா மாநிலம் குருகிராமத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் வெட்டுக்கிளிகள் இன்று படையெடுத்துள்ளன. லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக குருகிராம்-துவாரகா நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

குருகிராமத்தில் பரவி உள்ள வெட்டுக்கிளிகள் இன்று மாலை அல்லது நாளை காலையில் டெல்லிக்குள் பரவவும் வாய்ப்பு உள்ளதாக துணை கமிஷனர் அமித் காத்ரி தெரிவித்தார்.
Tags:    

Similar News