செய்திகள்
சரத்பவார்

மகா விகாஸ் கூட்டணி அரசு 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும்: சரத்பவார்

Published On 2020-06-27 03:54 GMT   |   Update On 2020-06-27 03:54 GMT
மகா விகாஸ் கூட்டணி அரசு 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் என்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 5 ஆண்டுகளுக்கு பிறகும் இதே நிலை தான் மாநிலத்தில் நீடிக்கும் என்றும் சரத்பவார் கூறினார்.
மும்பை :

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகாவிகாஸ் கூட்டணி கட்சிகள் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வருகின்றன. கூட்டணிக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை. இந்த கட்சிகள் உத்தவ் தாக்கரே தலைமையின் கீழ் பணியாற்றி வருகின்றன. உத்தவ் தாக்கரேவின் தலைமைக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முழுமையாக ஆதரவு அளித்து வருகின்றன. அவர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையான புரிதலுக்கு பிறகு தான் எடுக்கப்படுகின்றன. ஆட்சி முழுமையாக உத்தவ் தாக்கரே மற்றும் மந்திரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 3 கட்சிகளும் இணைந்து செயல்படுகின்றன.

அரசின் முடிவுகளில் நான் பங்கு பெறுவதில்லை. புயல் போன்ற சம்பவங்கள் நடக்கின்ற போது பார்வையிட்டு பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிப்பது போன்ற பணிகளை நான் செய்கிறேன். இந்த அரசு 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 5 ஆண்டுகளுக்கு பிறகும் இதே நிலை தான் மாநிலத்தில் நீடிக்கும். கொரோனா பிரச்சினையில் மும்பையில் நாளுக்கு, நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினாா். 
Tags:    

Similar News