செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் 1,000 கொரோனா மரணங்கள் மறைப்பு: முதல்-மந்திரிக்கு பட்னாவிஸ் மீண்டும் கடிதம்

Published On 2020-06-27 03:45 GMT   |   Update On 2020-06-27 03:45 GMT
மகாராஷ்டிராவில் 1,000 கொரோனா மரணங்களை அரசு மறைத்து இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
மும்பை :

மும்பையில் 950 கொரோனா மரணங்களை மாநில அரசு மறைத்து உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை தொடர்ந்து கூடுதலாக 1,000-க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த மரணங்களை மறைத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்து இருந்தது.

இந்தநிலையில், மாநிலத்தில் இன்னும் 1,000 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்படாமல் இருப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாநிலத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட 1,000 இறப்புகளை அரசு தெரிவிக்காமல் இருப்பது தவறானது. இது கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த மரணங்களாகும். ஒவ்வொரு கொரோனா மரணமும் 72 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. இது தொடர்பாக முதல்-மந்திரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News