செய்திகள்
உள்துறை மந்திரி அமித் ஷா

காங்கிரஸ் கட்சியில் மூச்சுத் திணறும் மூத்த தலைவர்கள்- அமித் ஷா தாக்கு

Published On 2020-06-25 07:30 GMT   |   Update On 2020-06-25 07:30 GMT
காங்கிரஸ் கட்சியில் இன்றும் ஜனநாயகம் இல்லை என்றும், மூத்த தலைவர்கள் பலர் மூச்சு திணறி வருவதாகவும் மத்திய மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் 45 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் கட்சி மற்றும் தேசிய நலனை விட குறிப்பிட்ட குடும்பத்தின் நலன் தான் அக்கட்சிக்கு முக்கியமானதாக இருந்தது எனவும் சாடியுள்ளார். 

‘இந்த மோசமான நிலை, 45 ஆண்டுகளை கடந்தும் கூட, இன்றும் காங்கிரஸ் கட்சியில் நிலவுகிறது. குடும்ப வாரிசுகளை தவிர மற்ற தலைவர்கள் வெளிப்படையாக பேச முடியவில்லை. மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான  இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கூட, சில தலைவர்கள்  சில பிரச்சனைகளை எழுப்பிய போது, அவர்களை சிலர் கூச்சலிட்டு அடக்கி உள்ளனர். செய்தித் தொடர்பாளர் சத்தமே இல்லாமல் நீக்கப்பட்டார். காங்கிரசில் மூத்த தலைவர்கள் பலர்  மூச்சு திணறி வருகின்றனர் என்பது சோகமான உண்மை’ எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News