செய்திகள்
இஸ்ரோ தலைவர் சிவன்

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு- மத்திய அரசின் முடிவுக்கு இஸ்ரோ வரவேற்பு

Published On 2020-06-25 06:03 GMT   |   Update On 2020-06-25 06:03 GMT
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சீர்திருத்தங்கள் உற்சாகம் அளிக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பெற நமது இளைஞர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கனவே முன்வந்துள்ளன. உலக விண்வெளி பொருளாதாரத்திற்கான ஒரு முக்கிய மையமாக இந்தியா உருவாகும் என்று உறுதியாக நம்புகிறோம்

தனியார் நிறுவனங்கள் முன்வந்து விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக மாற்ற வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை ஒரு புதிய விண்வெளி சகாப்தமாக மாற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News