செய்திகள்
டிகே சிவக்குமார்

கர்நாடகத்தில் பதவி ஏற்பு விழா 7,800 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: டி.கே.சிவக்குமார் தகவல்

Published On 2020-06-24 03:16 GMT   |   Update On 2020-06-24 03:16 GMT
வருகிற 2-ந் தேதி நடைபெறும் காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பு விழா, கர்நாடகத்தில் 7,800 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் வருகிற 2-ந் தேதி பதவி ஏற்கிறார். இந்த நிகழ்ச்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சியின் புதிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

வருகிற 2-ந் தேதி நான் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் 7,800 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சி நடை பெறும்போது பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

பேஸ்புக், டுவிட்டர், செய்தி தொலைக்காட்சி, ஜூம் செயலி போன்றவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அன்று 10 லட்சம் தொண்டர்கள் இந்த விழாவில் பங்கேற்று உறுதி மொழி ஏற்பார்கள். கட்சி தலைவராக நான் இதை செய்யவில்லை. தலைவர் பதவி என்பது ஒரு பொறுப்பு. கட்சி தொண்டர்களுடன் ஒன்று சேர்ந்து நான் எனது பணியை மேற்கொள்ள உள்ளேன்.

தொண்டர்கள் தான் காங்கிரஸ் சக்தி. தொண்டர்கள் இல்லாவிட்டால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது. பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் பணிகளை நான் மேற்கொள்வேன். ஒரு தலைவரை முன்னிறுத்தி பேசுவதை தவிர்த்துவிட்டு, கட்சி புகழ் பாடுவதை நான் உறுதி செய்வேன். தொண்டர்களின் குரல், கட்சியின் குரலாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
Tags:    

Similar News