செய்திகள்
கோப்புப்படம்

பீகார் சட்டசபை தேர்தலில் கொரோனா நோயாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி

Published On 2020-06-24 03:16 GMT   |   Update On 2020-06-24 03:16 GMT
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி இருப்பவர்கள், பீகார் தேர்தலில் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்ட அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
புதுடெல்லி:

இந்தியாவில், கொரோனா தாக்கம் ஏற்பட்ட பிறகு முதலாவது சட்டசபை தேர்தலை பீகார் சந்திக்க உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது.

கொரோனா பாதிப்பு இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று கருதப்படுவதால், கொரோனா நோயாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி அளிக்க விதிகளை திருத்துமாறு மத்திய சட்ட அமைச்சகத்தை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.

அதன்படி, தேர்தல் நடத்தை விதிகளில் சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதனால், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி இருப்பவர்கள், பீகார் தேர்தலில் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்ட அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
Tags:    

Similar News