செய்திகள்
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

சீன, ரஷிய வெளியுறவு மந்திரிகளுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

Published On 2020-06-23 09:35 GMT   |   Update On 2020-06-23 09:51 GMT
லடாக் பதற்றத்துக்கு மத்தியில் ரஷியா, சீனா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 புதுடெல்லி:

ரஷியா, இந்தியா, சீனா (ரிக்) வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ஒன்று மெய்நிகர் (காணொலி) முறையில் இன்று நடைபெற்றது. இதில் ரஷியா, சீனா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று நடத்தப்பட்டது.

இடையில் லடாக்கில் இந்தியா-சீனா ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. எனவே இந்த ரிக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா தயக்கம் காட்டி உள்ளது.

ஆனால் கூட்டத்தை நடத்தும் ரஷியாவின் வேண்டுகோள் காரணமாக ஜெய்சங்கர் பங்கேற்றதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  லடாக் மோதலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

3 நாடுகளும் பொதுவாக சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள், கொரோனா பாதிப்பு மற்றும் பிராந்திய, உலக நிலவரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
Tags:    

Similar News