செய்திகள்
கொரோனா பரிசோதனை

அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்த மாநிலங்கள்

Published On 2020-06-20 07:06 GMT   |   Update On 2020-06-20 07:06 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இதுவரை 8,27,980 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிவதற்கான பரிசோதனை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளை அதிகரிப்பதால் நோயாளிகளை விரைவாக கண்டறிய முடிகிறது. நாடு முழுவதும் இதுவரை 395048 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12948 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று வரை மொத்தம் 66,16,496 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,89,869 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை  8,27,980 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா - 7,37,597, ஆந்திரா-6,30,006, டெலலி- 3,34,376,  குஜராத்- 3,14,301, ராஜஸ்தான்- 6,67,643, மேற்கு வங்காளம்- 3,80,612, மத்திய பிரதேசம் - 2,82,674, கேரளா- 1,73,729, மற்றும் கர்நாடகாவில் 4,84,060 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News