செய்திகள்
காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ

கட்டிப்பிடி கொள்கையால் இந்தியாவின் இப்போதைய நிலை இதுதான்... வீடியோ வெளியிட்டு விமர்சித்த காங்கிரஸ்

Published On 2020-06-19 10:56 GMT   |   Update On 2020-06-19 10:56 GMT
மத்திய பாஜக அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியா-சீன படைகள் சமீபத்தில் லடாக் எல்லையில் மோதியதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அத்துடன், கட்டிப்பிடி கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு கொள்கைகளின் விளைவு இந்தியா தனது அண்டை நாடுகளிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த பிராந்தியத்தில் சீனா அதிக அதிகாரத்தைப் பெறுவதாகவும் தகவல் பதிவிட்டுள்ளது.


2 நிமிடம் 23  வினாடிகள் ஓடும் அந்த வீடியோ, ‘சீனாவை வலுவான நாடு ஆவதற்கு அனுமதித்த மோடி’ என்ற வாசகத்துடன் தொடங்குகிறது.

சீன படைகள் தாக்கியதில் மரணம் அடைந்த இந்திய வீரரின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சி, வீரர்களின் இறுதி ஊர்வலம், நேபாள-சீனா உறவு, வங்கதேசத்தில் மோடி பயணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டம், சீனாவுடன் நெருங்கி வரும் மியான்மர் மற்றும் இலங்கை நாடுகள், இந்திய விமானப்படை விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி, பைலட்டை சிறைப்பிடித்தது உள்ளிட்ட தகவல்கள் அந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது. இறுதியாக இந்தியாவும், சீனாவும் மோதலுக்கு தயாராவது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News