செய்திகள்
மேகாலயாவில் வாக்களிக்க வந்த எம்எல்ஏ

19 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்- மாலை 5 மணிக்கு முடிவு தெரியும்

Published On 2020-06-19 06:36 GMT   |   Update On 2020-06-19 06:36 GMT
நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என  பிப்ரவரியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மார்ச் மாதத்தில், தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் 36 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மீதமுள்ள 19 இடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்தல், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி 19 உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஆந்திரா மற்றும் குஜராத்திலிருந்து தலா 4 இடங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா மூன்று இடங்களும், ஜார்க்கண்டிலிருந்து இரண்டு இடங்களும், மிசோரம், மேகாலயா மற்றும் மணிப்பூரிலிருந்து தலா ஒரு இடமும் என மொத்தம் 19 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.

கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்எல்ஏக்கள் முக்கவசம் அணிந்து வந்து, சமூக விலகலை கடைப்பிடித்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள, இந்த தேர்தலின் முடிவுகள் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன.
Tags:    

Similar News