செய்திகள்
டி.கே.சிவக்குமார்

தொண்டர்களுக்கு வழிகாட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனை தேவை: டி.கே.சிவக்குமார்

Published On 2020-06-19 03:50 GMT   |   Update On 2020-06-19 03:50 GMT
கர்நாடக மேல்-சபை என்றால், அது மூத்தவர்களின் சபை என்று அழைக்கப்படுகிறது. தொண்டர்களுக்கு வழிகாட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனை தேவை என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக மேல்-சபை என்றால், அது மூத்தவர்களின் சபை என்று அழைக்கப்படுகிறது. நசீர் அகமது, பி.கே.ஹரிபிரசாத் ஆகிய 2 பேரையும் நாங்கள் ஒருமனதாக முடிவு செய்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம். எங்கள் கட்சியில் டிக்கெட் பெற பலத்த போட்டி இருந்தது. எங்களுக்கும், தொண்டர்களுக்கும் வழி காட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைகள் தேவை.

அதற்காக தான் இவர்கள் 2 பேரையும் மேல்-சபைக்கு அனுப்புகிறோம். இவர்கள் 2 பேர் கட்சியில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள். மூத்தவர்கள் உள்ள சபைக்கு, மூத்தவர்கள் செல்ல வேண்டியது அவசியம். அவர்கள் 2 பேரும் மாணவர் பருவத்தில் இருந்தே காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் தேசிய அளவில் பல பொறுப்புகளை வகித்துள்ளனர். அதனால் அவர்கள் 2 பேருக்கும் எங்கள் கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதே காரணத்தால் தான் மாநிலங்களவைக்கும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அனுப்பி இருக்கிறோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News