செய்திகள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

எல்லை மோதல் விவகாரத்தில் பிரதமர் என் மவுனமாக இருக்கிறார்? -ராகுல் கேள்வி

Published On 2020-06-17 04:57 GMT   |   Update On 2020-06-17 04:57 GMT
சீன எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியா-சீன எல்லையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் எல்லை மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் ஏன் மறைக்கிறார்? போதும். என்ன நடந்தது என்பது நமக்கு தெரியவேண்டும். நம்முடைய வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு தைரியம்? நம்முடைய நிலங்களை ஆக்கிரமிக்க அவர்களுக்கு என்ன தைரியம்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News