செய்திகள்
டிகே சிவக்குமார்

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் ஜூலை 2-ந் தேதி பதவி ஏற்கிறார்

Published On 2020-06-16 03:53 GMT   |   Update On 2020-06-16 03:53 GMT
ஜூலை மாதம் 2-ந் தேதி பதவி ஏற்பு விழாவை நடத்த டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கி உள்ளார். ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு கர்நாடக அரசு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை.
பெங்களூரு :

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் இன்னும் தொடர்கிறது. இதற்கிடையே கட்சி தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு டி.கே.சிவக்குமார் 2 முறை அனுமதி கேட்டார். 2 முறையும் மாநில அரசு அனுமதி தர மறுத்துவிட்டது.

கர்நாடக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.கே.சிவக்குமாரை தொடர்பு கொண்டு பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, “உங்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு எனது ஆட்சேபனை கிடையாது என்றும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள்” என்றும் கூறினார்.

இந்த நிலையில் ஜூலை மாதம் 2-ந் தேதி பதவி ஏற்பு விழாவை நடத்த டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கி உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு கர்நாடக அரசு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை. அந்த அனுமதியை எதிர்பார்த்து டி.கே.சிவக்குமார் காத்திருக்கிறார்.
Tags:    

Similar News