செய்திகள்
நிலநடுக்கம்

குஜராத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- 24 மணி நேரத்தில் இரண்டாவது அதிர்வு

Published On 2020-06-15 08:45 GMT   |   Update On 2020-06-15 08:45 GMT
குஜராத்தின் ராஜ்கோட் நகரின் அருகே இன்று மதியம் 4.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரின் அருகே இன்று மதியம் 12.57 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜ்கோட்டில் இருந்து வடமேற்கில் சுமார் 82 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகாக பதிவாகியிருந்தாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று காலை கட்ச் பிராந்தியத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் பகுதியில் 2001ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன், ஏராளமான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியது. அந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் கடுமையாக இருந்தது. 
Tags:    

Similar News