செய்திகள்
கொரோனா பரிசோதனை

டெல்லியில் தினமும் 18000 பரிசோதனைகள் நடத்த முடிவு

Published On 2020-06-15 08:26 GMT   |   Update On 2020-06-15 08:26 GMT
டெல்லியில் வரும் 20ம் தேதிக்குள் கொரோனா சோதனையை தினமும் 18000 என்ற அளவில் உயர்த்த உள்துறை மந்திரி முடிவு செய்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் கொரோனா  தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, டெல்லி அரசு கொரோனா வைரஸ் பரிசோதனையை விரைவுபடுத்தி ஜூன் 20ம் தேதிக்குள் ஒரு நாளைக்கு 18,000 சோதனைகளை நடத்த தொடங்கும் என அமித் ஷா கூறி உள்ளார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குமார் குப்தா கூறும்போது, பரிசோதனை கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும் என்ற பாஜவின் கோரிக்கையை உள்துறை மந்திரி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

‘தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை நிர்ணயம்  செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக ஒரு கமிட்டியை உள்துறை மந்திரி அமைத்துள்ளார். 2 நாட்களுக்குள் அந்த கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில் பரிசோதனை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்’ என்றும் ஆதேஷ் குமார் குப்தா கூறினார்.
Tags:    

Similar News