செய்திகள்
பாஜக

சீனா பற்றி தகவல் பெற ராகுல் காந்திக்கு வேறு வழி இருக்கிறது- பாஜக கருத்து

Published On 2020-06-13 14:05 GMT   |   Update On 2020-06-13 14:05 GMT
சீனா பற்றி தகவல் பெற ராகுல் காந்திக்கு வேறு வழி இருக்கிறது என்று பாஜக கூறியுள்ளது.
புதுடெல்லி:

சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்த விவரங்களை பகிரங்கமாக வெளியிடுமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

எல்லை பிரச்சினை பற்றி ராகுல் காந்தி விவரம் கேட்கிறார். சீனா பற்றி தகவல் பெற அவருக்கு வேறு வழி இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு, டோக்லாம் பிரச்சினையின்போது, அவர் சீன தூதரை சந்தித்து தகவல் கேட்கவில்லையா? முதலில் அதை மறுத்துவிட்டு, பிறகு ஒப்புக்கொள்ளவில்லையா?

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News