செய்திகள்
பாஜக

மாநிலங்களவை தேர்தல்- பாஜக 9 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு

Published On 2020-06-09 07:53 GMT   |   Update On 2020-06-09 07:53 GMT
மாநிலங்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 9 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அதன் எண்ணிக்கை 84 ஆக உயரும்.
புதுடெல்லி:

டெல்லி மாநிலங்களவையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த தேர்தல் நடப்பதாக இருந்தது. அது தள்ளிவைக்கப்பட்டு 19-ந்தேதி நடத்தப்பட இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதாவுக்கு 75 இடங்கள் உள்ளன. இப்போதைய தேர்தலில் பா. ஜனதா 9 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அதன் எண்ணிக்கை 84 ஆக உயரும்.

மொத்தத்தில் பாரதிய ஜனதா கூட்டணி எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும். மேல்சபையில் உள்ள 242 எம்.பி.க்களில் மெஜாரிட்டிக்கு 122 எம்.பி.க்கள் தேவை.
ஆனால் பாரதிய ஜனதா கூட்டணியில் குறைந்த அளவு எம்.பி.க்களே இருந்ததால் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அந்த கட்சிக்கு தொடர்ந்து சிக்கல் இருந்து வந்தது.

நட்பு கட்சிகளான அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி போன்ற கட்சிகளுடன் ஆதரவுடன் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வந்தது.  இப்போது பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைப்பதால் அதன் பலம் சற்று உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மெஜாரிட்டி பெறுவதற்கு போதுமான உறுப்பினர்கள் பாரதிய ஜனதாவுக்கு இல்லை.
Tags:    

Similar News