செய்திகள்
அனில் தேஷ்முக்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ரூ.100 கோடி செலவு: அனில் தேஷ்முக்

Published On 2020-06-08 03:28 GMT   |   Update On 2020-06-08 03:28 GMT
இதுவரை ரூ.100 கோடி செலவில் 11 லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.
மும்பை :

ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் சிக்கிய லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இது குறித்து மாநில உள்துறை அனில் தேஷ்முக் கூறியிருப்பதாவது:

ஷராமிக் ரெயில் டிக்கெட் கட்டணத்தில் மத்திய அரசு 85 சதவீதம் மானியம் தருவதாக உறுதி அளித்தது. எனினும் மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசின் உதவிக்கு காத்திருக்காமல் தொழிலாளர்களை சொந்த செலவில் ஊருக்கு அனுப்பியது. இதுவரை ரூ.100 கோடி செலவில் 11 லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் மாநில அரசின் மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற முடியும். இதற்காக மாநில அரசு சில ஆஸ்பத்திரிகளை மாநிலம் முழுவதும் அடையாளம் கண்டுள்ளது. 55 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை பணிக்குவர வேண்டாம் என கூறியுள்ளோம். ஆனால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News