செய்திகள்
தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா பாதிப்பா? - சகோதரர் மறுப்பு

Published On 2020-06-06 07:20 GMT   |   Update On 2020-06-06 07:20 GMT
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலை அவரது சகோதரர் மறுத்துள்ளார்.
புதுடெல்லி:

நிழலுலக தாதாவும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. தாவூத் வீட்டு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் கூறியிருக்கிறார். தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் வீட்டில்இருப்பதாகவும் அனீஸ் தொலைபேசி மூலம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாக மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம் மரணம் அடைந்துவிட்டதாகவும் இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் போலியான தகவல் பரவி வருகிறது.

மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராகிம் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான அவர் பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு அதை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News