செய்திகள்
இந்தியா, சீனா கொடி

அமைதி பேச்சு மூலம் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா-சீனா சம்மதம்

Published On 2020-06-06 03:24 GMT   |   Update On 2020-06-06 03:24 GMT
ஒரு நாடு, மற்ற நாட்டின் உணர்வுகள், கவலைகள், ஆசைகள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து, அவற்றை சர்ச்சை ஆக்காமல், இருநாட்டு (இந்தியா-சீனா) தலைமையும் அளித்த வழிகாட்டுதல்படி அமைதி பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
புதுடெல்லி :

லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவம் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய-சீனா இடையே நேற்று ராஜ்யரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவாவுக்கும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் உஜியாங்காவோவுக்கும் இடையே காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில், ஒரு நாடு, மற்ற நாட்டின் உணர்வுகள், கவலைகள், ஆசைகள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து, அவற்றை சர்ச்சை ஆக்காமல், இருநாட்டு தலைமையும் அளித்த வழிகாட்டுதல்படி அமைதி பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News