செய்திகள்
நிதி அமைச்சகம்

ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய அரசு

Published On 2020-06-05 09:06 GMT   |   Update On 2020-06-05 09:06 GMT
செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு ஆண்டுக்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என மத்திய நிதி அமைச்சகம் கூறி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு ஏராளமான நிதி செலவிடப்படுவதால், மத்திய அரசு பல்வேறு வகைகளில் செலவுகளை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் கரீப் கல்யாண், ஆத்ம நிர்பர் பாரத் அபியான் மற்றும் பிற சிறப்பு தொகுப்புத் திட்டங்களை தவிர, எந்தவொரு புதிய திட்டத்தையும் / துணைத் திட்டத்தையும் 2020-21ல் அரசு தொடங்காது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரீப் கல்யாண், ஆத்ம நிர்பர் பாரத் ஆகிய திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என்றும் கூறி உள்ளது.



இத்தகைய திட்டங்களுக்கான கொள்கை ரீதியான ஒப்புதல் இந்த நிதியாண்டில் வழங்கப்படாது. ஏற்கனவே மதிப்பிடப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட புதிய திட்டங்களைத் தொடங்குவதும் ஒரு வருடத்திற்கு அதாவது, 2021ம் ஆண்டு மார்ச் 31 வரையிலோ, அல்லது மறு உத்தரவு வரும் வரையிலோ நிறுத்தி வைக்கப்படும் என நிதித்துறை கூறி உள்ளது.

புதிய திட்டங்களுக்கான கோரிக்கைகளை அனுப்புவதை மத்திய அமைச்சகங்கள் நிறுத்த வேண்டும் என்று அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News