செய்திகள்
கொரோனா பரிசோதனை

டெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2020-06-05 04:24 GMT   |   Update On 2020-06-05 04:24 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் மொத்தம் 226770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 273 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 109462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 77 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 77793 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2710 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 27256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 220 பேர் உயிரிழந்துள்ளனர்.



டெல்லியில் பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்துள்ளது. 25004 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 650 பேர் மரணம் அடைந்துள்ளனர். குஜராத்தில் இதுவரை 18584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1155 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் - 33
ஆந்திர பிரதேசம் - 4223
அருணாச்சல பிரதேசம் - 42
அசாம் - 1988
பீகார் - 4493
சண்டிகர் - 301
சத்தீஸ்கர் - 756
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 12
டெல்லி - 25004
கோவா - 166
குஜராத் - 18584
அரியானா - 3281
இமாச்சல பிரதேசம் - 383
ஜம்மு - காஷ்மீர்- 3142
ஜார்க்கண்ட் - 793
கர்நாடகா - 4320
கேரளா - 1588
லடாக் - 90
மத்திய பிரதேசம் - 8762
மகாராஷ்டிரா - 77793
மணிப்பூர் - 124
மேகாலயா - 33
மிசோரம் - 17
நாகலாந்து - 80
ஒடிசா - 2478
புதுச்சேரி - 82
பஞ்சாப் - 2415
ராஜஸ்தான் - 9862
சிக்கிம் - 2
தமிழ்நாடு - 27256
தெலுங்கானா - 3147
திரிபுரா - 644
உத்தரகாண்ட் - 1153
உத்தர பிரதேசம் - 9237
மேற்கு வங்காளம் - 6876

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உள்படுத்தப்பட்ட நோயாளிகள்-7610

மொத்தம் - 226770.
Tags:    

Similar News