செய்திகள்
ராகுல்காந்தி

லடாக் எல்லையில் மோதல் : மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கோரிக்கை

Published On 2020-06-04 07:48 GMT   |   Update On 2020-06-04 07:48 GMT
சீனாவுடனான லடாக் எல்லை நிலவரம் குறித்து மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில்:

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ‘டுவிட்டர்’ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், சீனாவுடனான எல்லை நிலவரம் குறித்து மத்திய அரசு அமைதிகாப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுப்பதாகவும், எனவே அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். சீன வீரர்கள் யாரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று மத்திய அரசு உறுதியாக கூற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.



எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் வருகிற 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக வெளியான தகவலையும் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டுள்ளார்.

Tags:    

Similar News