செய்திகள்
பிரதமரின் ஏழைகள் நிதி உதவி திட்டம்

பிரதமரின் ஏழைகள் நிதி உதவி திட்டத்தில் ஏழைகளுக்கு ரூ.53,248 கோடி கிடைத்தது

Published On 2020-06-04 03:13 GMT   |   Update On 2020-06-04 03:13 GMT
பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில், பல்வேறு திட்டங்களின்கீழ் இதுவரை சுமார் 42 கோடி ஏழைகளுக்கு ரூ.53 ஆயிரத்து248 கோடி கிடைத்துள்ளது.
புதுடெல்லி :

ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில், பல்வேறு திட்டங்களின்கீழ் இதுவரை சுமார் 42 கோடி ஏழைகளுக்கு ரூ.53 ஆயிரத்து248 கோடி கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு அங்கமாக பெண்கள், ஏழை முதியோர், விவசாயிகள் ஆகியோருக்கு இலவச உணவு தானியங்களையும், ரொக்க உதவியையும் மத்திய அரசு வழங்கி உள்ளது.

விவசாயிகளுக்கு நிதிஉதவி வழங்கும் ‘பிஎம்-கிசான்‘ திட்டத்தில் முதல்கட்டமாக 8 கோடியே 19 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.16 ஆயிரத்து 394 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 2 தவணைகளாக மொத்தம் ரூ.20 ஆயிரத்து 344 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 தவணைகளாக ரூ.2 ஆயிரத்து 814 கோடியே 50 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், 2 கோடியே 81 லட்சம்பேர் பலன் அடைந்துள்ளனர்.கட்டுமான தொழிலாளர்கள் 2 கோடியே 30 லட்சம்பேருக்கு ரூ.4 ஆயிரத்து 312 கோடியே 82 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News