செய்திகள்
வைரல் புகைப்படம்

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் - வைரலாகும் புகைப்படம்

Published On 2020-06-03 04:23 GMT   |   Update On 2020-06-03 04:23 GMT
ஸ்பெயின் நாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கள்ள நோட்டு புகாரில் அவரை கைது செய்த வந்த காவல்துறை அதிகாரி, அவரை காரை விட்டு வெளியே தள்ளி தனது காலால் கழுத்தை அழுத்தும் வீடியோ வெளியானது. சுற்றி இருந்த மற்ற மூன்று போலீஸ்காரர்களும் அவரை தடுக்கவில்லை.  ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத் திணறி மரணம் அடைந்தார்.

ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா முழுக்க கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் கைகளில் கொடி மற்றும் பேனர்களை பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



வைரல் பதிவுகளில், கொரோனா வைரசை ஆயுதமாக பயன்படுத்தும் அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க வீதிகளில் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அது அமெரிக்காவில் எடுக்கப்படவில்லை என்பதும், தற்போதைய போராட்டங்களுக்கும் இந்த புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட்டது ஆகும்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News