செய்திகள்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

பீகார் சட்டசபை தேர்தல் - அமித்ஷா 9-ந் தேதி சமூக வலைதளத்தில் பிரசாரம்

Published On 2020-06-02 12:01 GMT   |   Update On 2020-06-02 12:01 GMT
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 9-ந் தேதி சமூக வலைதளம் மூலம் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் முடிகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி உச்ச நிலையில் இருக்கிறது. இதனால் பீகார் மாநிலத்தில் தற்போது ஆன் லைன் மூலம் பிரசாரம் செய்ய பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. மூத்த பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான
வருகிற 9-ந் தேதி பேஸ்புக் சமூக வலைதளம் மூலம் பீகாரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.



1 லட்சம் மக்களிடம் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுகிறார். 243 தொகுதிகளில் உள்ளவர்களிடம் அவர் இந்த உரையை நிகழ்த்துகிறார். இதை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்சுவால் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “எங்களது தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாக இது இருக்கும். அதைத் தொடர்ந்து நாங்கள் ஆன்லைன் மூலமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
Tags:    

Similar News