செய்திகள்
முதல் மந்திரி எடியூரப்பா

பெங்களூரு அருகே சுவாமி விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை

Published On 2020-06-02 10:46 GMT   |   Update On 2020-06-02 10:46 GMT
பெங்களூரு அருகே 120 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு:

பெங்களூரு அருகே 120 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.   முத்யாலயா மதுவி நீர்வீழ்ச்சி அருகே இந்த சிலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள்  முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்து வருகிறது.



இதுதொடர்பாக கர்நாடக வீட்டு வசதித்துறை மந்திரி சோமன்னா கூறியதாவது:& ‘குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை வைத்துதான் இந்த திட்டம் பிறந்துள்ளது. நீர்வீழ்ச்சி அருகே மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் விவேகானந்தர் சிலை அமையவிருக்கிறது. பன்னர்கட்டா தேசிய பூங்காவில் இருந்து இந்த இடம் 10 கி.மீ தொலைவில் உள்ளது.’  இதற்கான முறையான திட்டங்கள் மற்றும் விரிவான விளக்கங்கள் அடுத்த 15 நாட்களுக்குள் கர்நாடக அரசு அறிவிக்கும்” என்றார்.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் படேலின் 143&வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 2018&ம் ஆண்டு குஜராத் நர்மதை ஆற்றங்கரையில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News