செய்திகள்
சபாநாயகர் ஓம் பிர்லா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் குறித்து துணை ஜனாதிபதி, சபாநாயகர் ஆலோசனை

Published On 2020-06-02 07:27 GMT   |   Update On 2020-06-02 07:27 GMT
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை எப்போது நடத்துவது? எப்படி நடத்துவது? என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். வழக்கமான நடைமுறையில் கூட்டத்தொடரை நடத்த முடியாது என்பதால்  பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை கூட்டத்தை நடத்த ஆலோசித்தனர்.



பாராளுமன்றத்தில் மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர். பாராளுமன்ற மைய மண்டபத்தில் சுமார் 800 பேர் அமர இட வசதி உள்ளது. எனவே சமூக இடைவெளியை கடைப்பிடித்து மைய மண்டபத்தில் கூட்டத்தை நடத்துவது பற்றி ஆலோசித்தனர். மேலும் குறைந்த எண்ணிக்கையில் ஒருநாள் விட்டு ஒரு நாள் கூட்டத்தை நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News