செய்திகள்
அனில் தேஷ்முக்

12 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர்: மந்திரி அனில் தேஷ்முக் தகவல்

Published On 2020-06-02 03:22 GMT   |   Update On 2020-06-02 03:22 GMT
மகாராஷ்டிராவில் இருந்து 822 சிறப்பு ரெயில்களில் 11 லட்சத்து 86 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர் என மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் தெரிவித்தார்.
மும்பை :

கொரோனா ஊரடங்கு காரணமாக மராட்டியத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் நேற்று கூறியதாவது:-

கடந்த மாதம் 1-ந்தேதி முதல் இன்று (நேற்று) வரை வெளிமாநில தொழிலாளர்களுக்காக 822 ஷராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் மூலம் இதுவரை மொத்தம் 11 லட்சத்து 86 ஆயிரத்து 212 பேர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக 450 ரெயில்கள் உத்தபிரதேசத்திற்கு சென்று உள்ளன.

இதை தொடர்ந்து பீகாருக்கு 177, மேற்கு வங்கத்திற்கு 47, மத்திய பிரதேசத்திற்கு 34, ஜார்க்கண்டிற்கு 32, ராஜஸ்தானுக்கு 20, ஒடிசாவுக்கு 17, கர்நாடகாவுக்கு 6, சத்தீஸ்கருக்கு 6 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர மற்ற மாநிலங்களுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News