செய்திகள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்த மாணவி

உண்டியல் பணம் ரூ. 48 ஆயிரத்தில் 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி

Published On 2020-06-01 16:03 GMT   |   Update On 2020-06-01 16:03 GMT
உண்டியலில் சேர்த்து வைத்த 48 ஆயிரம் ரூபாய் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூன்று பேருக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார் 12 வயது சிறுமி.
இந்தியாவில் நாடு தழுவிய பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல உணவு கிடைக்காமலும், சம்பளம் கிடைக்காமலும் அவதிப்பட்டனர்.

இதனால் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டது. அதன்பின் மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்கியது. ஆனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இருந்தாலும் இன்னும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தற்போது விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும்பாலானோர் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி நிகாரிகா திவேதி. ஜார்க்கண்ட்டில் புற்றுநோயால் பாதித்தவர் உள்பட மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டள்ளனர்.

இதையறிந்த சிறுமி உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 48 ஆயிரம் ரூபாயை கொண்டு அந்த மூன்று பேரும் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

12 வயதிலேயே இவ்வளவு பெரிய காரியம் செய்ய அந்த மாணவியை ஜார்க்கண்ட் மாநில முதல்வர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

‘‘சமூகம் நமக்கு அதிகம் கொடுத்துள்ளது, இந்த நெருக்கடியின்போது அதை திருப்பித்தருவது நமது பொறுப்பு’’ என்று நிகாரிகா திவேதி தெரிவித்தார்.
Tags:    

Similar News