செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா நிவாரணம்- மோடி தலைமையில் பொருளாதார விவகார அமைச்சரவை குழு கூட்டம்

Published On 2020-06-01 07:28 GMT   |   Update On 2020-06-01 07:28 GMT
பிரதமர் மோடி தலைமையில் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின.

பல்வேறு நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரண நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கான நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மோடி தலைமையிலான அரசு இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த பின்னர் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News