செய்திகள்
மரணம்

சொந்த ஊருக்கு செல்லும் வழியில் கொரோனாவால் சிறப்பு ரெயிலிலேயே உயிரிழந்த தொழிலாளி

Published On 2020-06-01 02:31 GMT   |   Update On 2020-06-01 02:31 GMT
பீகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தை நெருங்கியபோது தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
பாட்னா:

ஊரடங்கால் அரியானாவில் வேலையின்றி தவித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 51 வயது தொழிலாளி சிறப்பு ரெயிலில் ஏறி தனது சொந்த ஊருக்கு கடந்த வாரம் பயணித்தார். அந்த ரெயில் பீகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தை நெருங்கியபோது திடீரென அந்த தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இதையடுத்து ரெயில் நிலையம் வந்ததும் உடல் கீழே இறக்கப்பட்டு, அவருடைய ரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதனால் பீகாரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கால் சுமார் 60 நாட்களாக வெளி மாநிலத்தில் சிக்கித் தவித்த தொழிலாளி சொந்த ஊருக்கு செல்லும் வழியில் ரெயிலிலேயே உயிரிழந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News