செய்திகள்
விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி

மிஷன் வந்தே பாரத் திட்டத்தில் 47,000க்கும் அதிகமானோர் இந்தியா திரும்பினர் - விமானப் போக்குவரத்து மந்திரி

Published On 2020-05-31 18:25 GMT   |   Update On 2020-05-31 18:25 GMT
மிஷன் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 47,000-க்கும் மேற்பட்டோர் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர் என விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன் காரணமாக விமான சேவைகள் முடங்கின.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்து, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை படிப்படியாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த 7-ம் தேதி முதல் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் மத்திய அரசு அழைத்து வருகிறது.

இதற்கிடையே, இரண்டாம் கட்ட பணி 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 நாடுகளுக்கு 149 விமானங்களை இயக்கி, அதில் 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

இந்நிலையில், மிஷன் வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணி ஜூன் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மிஷன் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தற்போது வரை 47,000 க்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பியுள்ளனர் என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News