செய்திகள்
முதல்வர் அமரிந்தர் சிங்

பஞ்சாபில் ஜூன் 30-ந் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு

Published On 2020-05-30 16:31 GMT   |   Update On 2020-05-30 16:34 GMT
நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30ம் தேதி வரை பொது ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப்:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.



இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின.

இந்தநிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும்  அவர் தெரிவிக்கையில் மத்திய அரசின் வழிமுறையை பின்பற்றி சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News