செய்திகள்
தண்ணீர் சுமந்து செல்லும் பெண்கள்

ம.பி.-யில் தண்ணீருக்காக 2 கி.மீட்டர் தூரம் பொதுமக்கள் நடந்து செல்லும் அவலம்

Published On 2020-05-29 10:53 GMT   |   Update On 2020-05-29 10:53 GMT
மத்திய பிரதேசத்தில் குடிதண்ணீருக்காக பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலை நிலை உள்ளது.
இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாட்னி என்ற கிராம மக்கள் தண்ணீருக்காக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அவர்கள் ஒரு குடம் தண்ணீருக்காக தினந்தோறும் இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்கிறார்கள். அதன்பின் அங்குள்ள கிணற்றில் உள்ள தண்ணீரை எடுத்து கொண்டு வருகிறார்கள். தற்போது கடும் வெயில் அடிப்பதால் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.



அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில் ‘‘எங்கள் கிராமத்தில் தண்ணீர் இல்லை. எங்களுக்கு மாற்று ஏற்பாடு ஏதும் இல்லை. தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதால் எங்களுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. பிரதமர் மோடியும், முதலமைச்சர் சிவ்ராஜ் சவுகானும் உதவ வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News