செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டதால் மறியலில் ஈடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்

Published On 2020-05-29 03:07 GMT   |   Update On 2020-05-29 03:07 GMT
பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சண்டிகர்:

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்த தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வாகனங்கள் மூலம் ரெயில் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், சிறப்பு ரெயில்கள் திடீரென ரத்து செய்யப்படுவதாலும், தாமதம் ஆவதாலும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

அவ்வகையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பயணம் செய்யும் ரெயில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அமிர்தசரஸ் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அரசாங்கம் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதுபற்றி தொழிலாளர்கள் கூறுகையில், ‘நேற்று எங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்கள். பேருந்திலும் ஏறினோம். ஆனால், எங்கள் ரெயில் ரத்து செய்யப்பட்டதாக கடைசி நேரத்தில் கூறினார்கள். இதனால் நாங்கள் சாலையிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்’ என்றனர்.
Tags:    

Similar News